fbpx

”மக்களே எச்சரிக்கை”..!! வங்கக்கடலில் காத்திருக்கும் ’சிட்ரங்’ புயல்..!! பாதிப்பு எப்படி இருக்கும் தெரியுமா..?

மத்திய மேற்கு வங்கக்கடலில் ‘சிட்ரங்’ புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22ஆம் தேதிக்கு பிறகு ’சிட்ரங்’ என்ற புயல் வங்கக்கடலில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பெயர் தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

”மக்களே எச்சரிக்கை”..!! வங்கக்கடலில் காத்திருக்கும் ’சிட்ரங்’ புயல்..!! பாதிப்பு எப்படி இருக்கும் தெரியுமா..?

இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மத்திய மற்றும் மேற்கு பகுதியில் இந்த புயல் நிலைக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி புயலாக மாற வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், புயல் நகரும் பாதை இதுவரை கணிக்கப்படவில்லை என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதியான பிறகு இதன் பாதை கணிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

தீபாவளியை தொடர்ந்து, வரவுள்ள கிரகணம்.. இதை மட்டும் செஞ்சிடாதீங்க.. எச்சரிக்கை.!

Wed Oct 19 , 2022
பூமியில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தைக் காணவிருக்கின்ற நிலையில் தீபாவளியை ஒட்டி அது நிகழ இருக்கின்றது. இந்த ஆண்டில் மட்டும் நான்கு கிரகணங்கள். அவைகளில், இரண்டு சந்திர கிரகணங்கள் மற்றும் இரண்டு சூரிய கிரகணங்கள். தற்போது, வர இருக்கும் சூரிய கிரகணம் தீபாவளிக்கு பின் நிகழு இருக்கிறது. ஆண்டு முடிவடையும் நிலையில், இரண்டாவது சூரிய கிரகணம் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 அன்று விழுகிறது. இதனை, ஐரோப்பா, […]

You May Like