fbpx

மக்களே எச்சரிக்கை… Face க்ரீமால் சிறுநீரகம் பாதிப்பு..? ஆய்வில் அதிர்ச்சி!

மும்பையில், முகம் பொழிவு பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட க்ரீமால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், முகம் பொழிவு பெறுவதற்காக, அப்பகுதியில் செயல்பட்டு வந்த அழகு நிலையத்தில் க்ரீம் ஒன்றை வாங்கி, பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் அந்த க்ரீமை தடவிய சில நாட்களிலேயே, இளம்பெண்ணின் முகம் நன்றாக நிறமாற்றம் அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, இளம்பெண்ணின் தாயும், சகோதரியும் அதே க்ரீமை பயன்படுத்திவந்துள்ளனர். ஆனால், இதனை பயன்படுத்திய 4 மாதங்களில், மூவருக்கும் அடுத்தடுத்து `Glomerulonephritis’ எனும் சிறுநீரகம் தொடர்பான பிரச்ச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 3 பேரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துவந்தனர். இதையடுத்து, 3 பேருக்கும் எப்படி சிறுநீரகம் பாதிப்படைந்தது என்பது குறித்து KEM மருத்துவமனை ஆய்வுக்க்கூடத்தில் சோதிக்கப்பட்டன. சோதனையின் முடிவில், இவர்கள் முகத்திற்கு பயன்படுத்திய க்ரீம் தான் சிறுநீரகம் செயலிழக்க காரணம் என்று தெரியவந்தது.

அந்த ஸ்கின் க்ரீமில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருந்ததாகவும், அது அந்தப் பெண்களின் ரத்தத்திலும் அதிகமாக்கியதாகவும் சிகிச்சை அளித்த மருத்துவர் துக்காராம் ஜமால் தெரிவித்துள்ளார். மேலும், சாதாரணமாக ஒருவரின் உடலில் 7ppm என்ற அளவில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு, அந்த பெண்களின் உடலில் 46 வரை இருந்ததாகவும், இதுவே சருமம் கருமை அடைவதைத் தடுத்து சிவப்பாகச் செய்ய உதவியதாகவும் கூறிய மருத்துவர், இதுவே சிறுநீரகத்துக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்

Kokila

Next Post

ரெடியா...? மார்ச் 1 முதல் 9-ம் தேதி வரை... 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு...! முழு விவரம் இதோ...

Wed Feb 8 , 2023
11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செய்முறைத்தேர்வுகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலான நாட்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி பள்ளி […]

You May Like