fbpx

மக்களே உஷார்..!! பிளாஸ்டிக் பாத்திரங்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..? எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

பொதுவாக சமையலில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்களுக்கு எதிராக பல சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். எந்த விதத்தில் அதை பயன்படுத்தினாலும், நமது உடலில் நஞ்சை கலக்கும் என்று பல ஆண்டு காலமாக சொல்லியும், குறைவான விலை காரணமாக மக்கள் அதனை வாங்குகின்றனர். இதற்கிடையே, சில நிறுவனங்களும் உணவு பொருட்களை சூடு செய்யக் கூட இந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தலாம் என்று சில தயாரிப்புகளைக் கொண்டு வந்து மக்களை குழப்புகின்றனர். ஃபுட் கிரேடு பிளாஸ்டிக், அது என்னது ஃபுட் கிரேடு. பிளாஸ்டிக் என்றால் அது ஆபத்து தான். புதிய வகையிலான பெயர்களை சூட்டி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள், மருத்துவர்களின் குரலுக்கு செவி கொடுக்கும் விதமாக ஒரு ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. அதாவது, உணவை சூடு செய்ய உகந்த பிளாஸ்டிக் என்று கூறப்படும் விர்ஜின் மெட்டீரியல்களில் இருந்து கோடிக்கணக்கிலான பிளாஸ்டிக் நுண் துகள்களை மக்கள் தங்கள் உணவோடு தினமும் சேர்த்துக் கொள்கின்றனர் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது குழந்தைகளுக்காகப் பயன்படுத்தும் சூடு செய்யும் தரம் கொண்ட பிளாஸ்டிக் பாத்திரங்களின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் அளவில் இருந்தும், 2 பில்லியன் நானோ பிளாஸ்டிக்ஸ் மற்றும் 4 மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் வெளிப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு குறிப்பில், இதே பிளாஸ்டிக் நுண்துகள்கள் காரணமாக சிறுநீரக செல்களின் வளர்ச்சியில் தடை ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வளவு மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகளை நாம் எடுத்துக்கொள்கிறோம் என்பதை அறிவது மிகவும் முக்கியம் என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரும் அமெரிக்காவின் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான காசி அல்பாப் ஹுசைன் தெரிவித்துள்ளார். நம்முடைய ஆய்வு உள்பட பல ஆய்வுகள், நுண்ணிய மற்றும் நானோ பிளாஸ்டிக்கின் நச்சுத்தன்மை வெளிப்பாட்டின் அளவோடு மிகவும் தொடர்புடையது என்பதை நிரூபித்திருப்பதாக ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 பிளாஸ்டிக்குகளும், பாலிப்ரோப்பிலீனால் செய்யப்பட்ட 2 குழந்தைகளுக்கான உணவு பாத்திரங்களாலும், பாலிஎதினால் கொண்டு செய்யப்பட்ட மறுபயன்பாட்டு பை ஆகியவற்றுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பிரிட்ஜில் வைப்பதாக இருந்தாலும், பிளாஸ்டிக் பாத்திரங்களின் உணவு பொருட்களை வெளியே வைப்பதாக இருந்தாலும் சரி, அனைத்தும் ஆபத்து தான். நடத்தப்பட்ட ஆய்வில், பாலிப்ரோப்பிலீன் கொள்கலன்கள் மற்றும் பாலிதீன் பைகள் பொதுவாக மைக்ரோபிளாஸ்டிக்ஸை விட சுமார் ஆயிரம் மடங்கு அதிகமான நானோபிளாஸ்டிக்ஸை வெளியிடுகின்றன என்று குழு கண்டறிந்தது.

உணவுகளை சேகரித்து வைக்க, கண்ணாடி பாட்டில்கள், ஸ்டீல் பாத்திரங்கள், மண் பாண்டங்களை பயன்படுத்துவது நல்லது. உங்களை அறியாமல் உடலில் சேரும் இந்த பிளாஸ்டிக் நச்சு, எந்த நோயை கொண்டு வரும் என மருத்துவருக்கும் தெரியாது. இங்கு புற்றுநோயால் தினமும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களிடம் இதுவரை மருத்துவர்கள் இதன் காரணமாக தான் உங்களுக்கு புற்றுநோய் வந்தது என்று கூறுயதில்லை. எனவே, வரும் முன் காப்போம் என்பது போல, நெகிழியை அறவே தவிர்ப்பது நம் வாழ்வியலை மேலும் சுகமானதாக்கும்..!

Chella

Next Post

பேச மறுத்து முன்னாள் காதலி திட்டமிட்டு படுகொலை செய்த இளைஞர்…..! விசாரணையில் வெளியான பகீர் உண்மை…..!

Sat Jul 29 , 2023
டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி நர்கீஸ்(25) இவர் இர்பான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. வேலை பார்க்க வந்துள்ளார் இந்த நிலையில் நர்கீசை காதலிப்பதாக இர்ஃபான் தெரிவித்து இருக்கிறார் ஆனாலும் நர்கீஸ் காதலை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட இர்ஃபான் அந்த மாணவி மீது கடுமையான கோபத்தில் இருந்திருக்கிறார். அதன் பிறகு தன்னுடன் பேச மறுத்த மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார். ஆகவே […]

You May Like