fbpx

மக்களே எச்சரிக்கை!… 79%ஆக உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு!… ஆய்வில் தகவல்!

உலக அளவில் கடந்த 3 வருடங்களில் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே 79 சதவீதத்தினர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்ஷ் மருத்துவ இதழியலானது (புற்றுநோய்) (British Medical Journal ) வெளியிட்டுள்ள ஆய்வின் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டில் உலக அளவில் ஒப்பிட்டு பார்த்தால் 50 வயதுக்கு உட்பட்ட 1.82 மில்லியன் பேர் பல்வேறு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 2019 ஆம் ஆண்டில் இந்த பாதிப்பு எண்ணிக்கையானது 3.82 மில்லியனாக உயர்ந்துள்ளது என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த காலகட்டத்தில் ஆரம்பகட்ட புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் என்பது 28 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கின்றன.

இந்த BMJ ஆய்வானது Global Burden of Disease என்பதிலிருந்து 2019 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியா உள்பட 204 நாடுகளில் 29 வகையான புற்றுநோய் பற்றிய தரவுகளை உள்ளடக்கிய விவரங்களானது பெறப்பட்டுள்ளது. இந்த BMJ ஆய்வின் மூலமாக 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு மார்பக புற்றுநோயின் முதல் கட்ட விளைவுகள் அதிகளவில் அதிகரிப்பதாக 2019 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு தெரிவிக்கின்றது. ஆனால் மூச்சுக்குழல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட்ரோஸ் புற்றுநோய் போன்றவை 1990 ஆம் ஆண்டிலிருந்தே அதிகரிக்க தொடங்கிவிட்டது என்று தெரிவிக்கின்றன.

1990 மற்றும் 2019 இடைப்பட்ட ஆண்டில் ஆரம்பக்காலகட்ட மூச்சுக்குழல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட்ரோஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.28 மற்றும் 2.23% ஐ என்ற விகிதத்தை கொண்டிருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் இதேபோல கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.88% என்றும், ஹெபடைடிஸ் பி என்ற தடுப்பூசியினை கொண்டு கல்லீரல் புற்றுநோயை சார்ந்த பாதிப்புகளை குறைப்பதில் இந்த உலக அளவிலான நோய்திட்டம் சிறந்த பங்காற்றிவருவதாக தெரிவிக்கிறது.

Kokila

Next Post

AsiaCup_2023: இந்த ஆட்டத்திலும் குறுக்கிட்ட மழை…! தடைபட்டது இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்…

Sun Sep 10 , 2023
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பமோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கில் இருவரும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர். இந்தியாவின் முதல் விக்கெட் 16.4 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விழுந்தது, அதிரடியாக விளையாடிய […]

You May Like