கோடநாடு வழக்கு.. முக்கிய புள்ளிகளிடம் 2-வது நாளாக தொடரும் விசாரணை….

கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரின் மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

2017-ம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக தனிப்படை மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதுவரை 240-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. அந்த வகையில் நேற்று முதன்முறையாக மணல் ஒப்பந்ததாரர்களான ஆறுமுகசாமி மற்றும் அவரின் மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.. கடந்த 2017-ம் ஆண்டு சென்னையில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் குமாரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது..

நேற்றைய தினம் ஆறுமுக சாமி மற்றும் செந்தில்குமாரிடம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், 2-வது நாளாக இன்றும் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.. கோவை காவலர் பயிற்சியில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.. சசிகலா, தினகரன் குடும்பத்தினருடன் செந்தில்குமாரின் தந்தை ஆறுமுகசாமி நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் ஆறுமுகசாமியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Maha

Next Post

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்.. 9 பேர் பலி.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி..

Fri Jul 8 , 2022
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராம்நகர் கோட்வார் சாலையில் அமைந்துள்ள தேலா மண்டலத்தில் இந்த விபத்து நடந்தது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண் குழந்தை உட்பட 11 பேர் பயணித்துள்ளனர்… உத்தரகாண்ட் […]

You May Like