தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து 7 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் காலையில் அறிவித்திருந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழக்தில் உள்ள சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தற்போது அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை, மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, தேனீ, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
மேலும் தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.