fbpx

2008-க்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் பிடிக்க தடை.. எந்த நாட்டில் தெரியுமா..?

அடுத்த தலைமுறையினர் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்குவதைத் தடை செய்யும் சட்டத்தை நியூசிலாந்து அரசு இயற்றி உள்ளது..

புகைபிடிக்காத தலைமுறையை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டத்தை இயற்றி உள்ளது.. இந்த சட்டத்தின்படி, வருங்கால சந்ததியினர் 18 வயதை அடைந்த பிறகும் புகைபிடிக்க முடியாது. புகைபிடிக்கும் வயதை உயர்த்துவதுடன், சிகரெட்டுகளில் உள்ள நிகோடின் அளவை கணிசமாக குறைத்து, மற்றும் பல்பொருள் அங்காடிகளை விட சிறப்பு புகையிலை கடைகளில் மட்டுமே விற்க அனுமதி வழங்க இந்த சட்டம் வழிவகை செய்யும்..

பெரும்பான்மையான கட்சிகள் இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியான தேசியக் கட்சியின் மேட் டூசி கூறுகையில், இந்த நேரத்தில் கட்சி சட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில், அதன் சோதனைத் தன்மை குறித்து தங்களுக்கு கவலைகள் உள்ளன.

இதற்கிடையில், 2007 க்குப் பிறகு பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதை தடுக்கும் வகையில், இ-சிகரெட்டுகள் உட்பட அனைத்து புகையிலை பொருட்களையும் தடை செய்ய மலேசியா பரிசீலித்து வருகிறது.. இதே போல், ஆஸ்திரேலியாவிலும், சிகரெட்டை தடை செய்ய அரசு பரிசீலனை செய்து வருகிறது.. நியூஸிலாந்தை போலவே ஆஸ்திரேலியாவிலும் புகை பிடிக்கும் விகிதம் அதன் மக்கள் தொகையில் வெறும் 10.7 சதவீதத்தைக் கொண்டுள்ளது-உலகிலேயே மிகக் குறைந்த அளவில் உள்ளது. ஆனாலும் புகைப்பிடித்தலை தடை செய்ய அரசு பரிசீலித்து வருகிறது..

Maha

Next Post

காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பக்தர்கள்; சதுரகிரியில் பரபரப்பு...!

Fri Jul 29 , 2022
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கறது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்காக நான்கு நாட்கள், பௌர்ணமிக்காக நான்கு நாட்கள் என மொத்தம் எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி உண்டு. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று திருவிழா வெகு […]

You May Like