fbpx

மக்களே…! பட்டா மாறுதல்… இனி எல்லாம் இந்த இணையத்தளம் தான்…! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…! முழு விவரம்

பட்டா மாறுதல் “தமிழ்நிலம்” கைப்பேசி செயலி www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பட்டா மாறுதல் “தமிழ்நிலம்” கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை Tamil Nilam Citizen portal https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டது.

உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம்(ஊரகம்) மற்றும் தமிழ்நிலம்(நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பட்டா/சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அபதிவேடு, அரசு புறம்போக்கு நிலவிவரம், புலப்படம்/நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் இணைய வழி சேவை www.eservices.tn.gov.in இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப்பட்டியல்கள் விவரங்கள் (correlation statement) பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் வட்டங்கள் கிராமங்கள் மாநகராட்சிகள் நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள். சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம்.

Vignesh

Next Post

உங்கள் குழந்தை சரியாக படிக்கவில்லையா.? கல்வியை அருளும் நரசிம்மர் கோவில்.!

Fri Jan 19 , 2024
மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒத்தகடை ஆனைமலை அடிவாரத்தில் அருள்மிகு யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த குடைவரை கோவில். கட்டிடக்கலையில் கை தேர்ந்த பல்லவர்கள் இந்த கோவிலை கட்டியதாகவும், அதன் பின் மதுரையை ஆட்சி செய்த பாண்டியர்கள் இந்த கோவிலை பராமரித்து வந்ததாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவிலில் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் இறைவியாக நரசிங்கவல்லி இருந்து பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர். நரசிம்மர் […]

You May Like