fbpx

மக்களே மறந்துறாதீங்க..!! சட்டென மாறிய வானிலை..!! அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்காம்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (29.06.2023) மற்றும் நாளை (30.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், (01.07.2023 மற்றும் 02.07.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் (03.07.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

எனக்கே அபராதமா, மோட்டார் வாகன ஆபிஸுக்கு கரண்ட் கட் - பழிக்கு பழி

Thu Jun 29 , 2023
ஏஐ கேமரா எனப்படும் செயற்கை நுண்ணறிவு பெற்ற கேமராக்களை சாலை போக்குவரத்தை பராமரிக்க பொருத்துவதா அல்லது வேண்டாமா என்கிற விவாதம் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்க, மறுப்பக்கம் ஏஐ கேமராக்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொருத்தும் பணிகளும் நடக்கின்றன. ஏஐ கேமராக்கள் மூலம் சில சமயங்களில் ஆதாரமற்ற அபராதங்கள் விதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக இந்த குற்றச்சாட்டுகள் கேரளா மாநிலத்தில்தான் அதிகளவில் எழுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த குற்றச்சாட்டுகள் […]

You May Like