fbpx

மக்களே 2 நாட்களுக்கு வெளியே போகாதீங்க.. இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும்..

தமிழகத்தில் இன்றும் நாளையும், இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.. வரும் 17-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு செம சலுகை..!! ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு..!!

Thu Apr 13 , 2023
இந்தியாவில் ரயில்வே துறை முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக உள்ளது. மேலும், ரயில்களில் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தும் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பெண்கள் மற்றும் வயதின் அடிப்படையில் இருக்கைகள் அறிவிக்கப்படும். எனினும், மாற்றுத்திறனாளிகள் மேல் இருக்கை கிடைப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் ஸ்லீப்பர் க்ளாசில் (எஸ் பெட்டி) 2 கீழ் படுக்கை மற்றும் நடுப்படுக்கை ஒதுக்கப்பட வேண்டும் என ரயில்வே மண்டல […]

You May Like