fbpx

மஞ்சள் அலர்ட்: மக்களே வெளியே போகாதீங்க..! இன்று வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே மக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக உள்ளது. வாட்டி வதைக்கும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. அனல் காற்று வீசுவதினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என்பதால், தமிழ்நாட்டிற்கு மீண்டும் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு, வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் அதிக மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பது இதுவே முதல் முறையாகும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Read More: அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை ; தலைசுற்றிப்போன பயணிகள்! இதுதான் காரணமா?

Rupa

Next Post

"நடிகை தேர்வு" ஒரே மேடையில் 10 ஆண்களை முத்தமிடச் சொன்னார்கள் - ஹாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்

Sat Apr 27 , 2024
நடிகை தேர்வுக்காக சென்றிருந்தபோது, ஒரே மேடையில் 10 ஆண்களை முத்தமிடச் சொன்னதாகவும், அது மிகவும் மோசமான தருணம் எனவும் ஹாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் அன்னே ஹாத்வே வேதனையுடன் பகிர்ந்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகை அன்னே ஹாத்வே, அமெரிக்காவில் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, ஹாலிவுட் படங்களில் நடிக்க வந்த புதிதில் பல்வேறு சிரமங்களை, தான் எதிர்கொண்டதாக தெரிவித்தார். ஹாலிவுட் உலகில் நடிகர் -நடிகையர் இடையே […]

You May Like