சென்னையில் தீபாவளி கொண்டாட்டத்தால், காற்று மாசு அளவு அதிகரித்து பொதுமக்களுக்கு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க தொடங்கி விட்டனர். இதனால் காற்று மாசுபாடு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக காற்றின் தரக் குறியீட்டில் 101-200 என்ற மிதமான வரம்பில், ஏற்பட்ட இந்த ஏற்றம் காரணமாக மூச்சுத் திணறலை அனுபவிக்கக்கூடிய ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளை கொண்ட நபர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நேரத்தில் நீண்ட நேரம் வெளியில் இருப்பது இதய நோய் உள்ளவர்களையும் பாதிக்கலாம். எனவே, மேற்கண்ட குறைபாடு உள்ளவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்து காற்று மாசுபாடு குறித்து அறிவுறுத்தி வருகின்றனர். அதே போல், தங்கள் வீட்டின் அருகில் இதே போல் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் பொதுநலன் கருதி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.