fbpx

”மக்களே”… ”இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க”..!! வாக்காளர் பட்டியலில் திருத்தம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அக்.27ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அக்டோபர் 27ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு டிசம்பர் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் டிசம்பர் 26ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2024 ஜனவரி 5இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 2024 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலி்ல் சேர்ப்பதை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக வந்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர்.

பின்னர், ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை, வாக்குச் சாவடிகளை திருத்தியமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலிலுள்ள மங்கலான, மோசமான, தரமற்ற, படங்களை மாற்றுதல், பிரிவு அல்லது பகுதிகள், வாக்குச்சாவடி எல்லைகள் மறு சீரமைப்பு, இடைவெளிகளைக் கண்டறிதல் மற்றும் அத்தகைய இடைவெளிகளைக் குறைப்பதற்கான உத்திகளையும் காலக்கெடுவையும் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

அக்டோபர் 27ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 30ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீது வரும் டிச.26-க்குள் தீர்வு காணப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளின் போது தகுதியான வாக்காளர்கள் பெயர்களை சேர்க்கலாம். அல்லது, பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பு ஆகியவற்றுககு படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

Chella

Next Post

`என்னை சிலர் மிரட்டுகிறார்கள்… எனக்கே இந்த நிலையா?' - நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு பேட்டி!

Thu Sep 28 , 2023
`கொடைக்கானலில் வீடு கட்டி வரும் என்னை, சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் மிரட்டுகின்றனர்’ என்று நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சினிமா நடிகர் பாபி சிம்ஹா, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக, ஜமீர் என்ற பொறியாளரிடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயை நடிகர் பாபி சிம்ஹா கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், முழுத்தொகையை பெற்றுக் கொண்ட ஜமீர், கட்டிடப் […]

You May Like