கரும்பு சாறு இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு கோடை கால பானமாகும். இது நமது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் இதன் விலையும் மலிவானது. இதில் கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கோடையில், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மொத்தத்தில் இந்த சாறு குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
ஆனால், பலருக்கு இது நன்மையாக இருந்தாலும், சிலருக்கு தீங்கு. எனவே, எந்தெந்த நபர்கள் கரும்புச்சாறு குடிக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இதில கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. இதனால், நீரிழிவு நோயாளியின் உடலில் இரத்த சர்க்கரை பாதிக்கப்படும். மேலும், இதில் அதிகளவு இயற்கை சர்க்கரை சுக்ரோஸ் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் இதை குடித்தால், அவர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
நீங்கள் ஏற்கனவே, உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்தாலும், அதில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், இதில் அதிக கலோரிகள் உள்ளது. இந்த இரண்டு பொருட்களும் எடை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கும். உங்களுக்கு சீக்கிரம் சளி பிடித்தால் அல்லது சளி பிரச்சனை இருந்தால், கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்கலாம். ஏனென்றால், இது குளிர் தன்மை கொண்டது. இதனால் தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், கரும்புச் சாற்றை குடிக்கவே கூடாது. ஏனெனில், அது பிரச்சனையை மேலும் மோசமாக்கும். உண்மையில், கரும்பு சாறு பெரும்பாலும் ரோட்டு வண்டிகளில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஈக்கள் கூட உட்காரும். இது ஆரோக்கியமற்றது. இதன் காரணமாக, வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படலாம்.
Read More : ’நினைச்ச மார்க் வரல’..!! 600/494 எடுத்தும் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!! தேனியில் அதிர்ச்சி..!!