சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.55,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 54,680ஆக இருந்த நிலையில், இன்றைய தினம் (ஏப்ரல் 19) சவரனுக்கு ரூ.440உயர்ந்து ரூ.55,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.55 உயர்ந்து ரூ.6,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினத்தில் சவரனுக்கு 250 ரூபாய் குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியில் விலை ரூ.90-க்கும், 1கிலோ வெள்ளியின் விலை ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்பட்டது வருகிறது.