fbpx

ரஷ்யாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்; பின்லாந்து எல்லை மூடப்படுவதாக அறிவிப்பு..!!

உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக ரஷ்யாவில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டுக்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிபர் புதினின் அறிவிப்புக்கு எதிராக, ரஷியா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் இருக்கைகள் முன்பதிவு செய்யும் விகிதம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி ரஷியாவின் அண்டை நாடுகளான போலாந்து, பின்லாந்து நாடுகளுக்கு ரஷிய நாட்டவர்கள் அதிகமானோர் செல்லத் தொடங்கியுள்ளனர். நிலைமை தீவிரமடைவதால், இன்று நள்ளிரவு முதல் ரஷிய சுற்றுலாப் பயணிகள் பின்லாந்துக்குள் நுழைய அனுமதியில்லை என்று அந்த நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் ரஷியாவுடனான தங்கள் நாட்டின் எல்லை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பின்லாந்து வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், இந்த முடிவு இப்போதுள்ள நிலைமையில், ரஷியாவில் இருந்து பின்லாந்துக்கு படையெடுக்கும் மக்களை முழுவதுமாக தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வருபவர்கள், மற்றும் வேலை மற்றும் படிப்புக விஷயங்களுக்காக வருபவர்கள் பின்லாந்திற்குள் நுழைய அனுமதி உண்டு. ரஷிய ராணுவத்திற்கான அணிதிரட்டும் உத்தரவு, இப்போது பின்லாந்து அரசு எடுத்துள்ள முடிவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

Baskar

Next Post

அக்டோபர் 1-2023 முதல் கார்களில் கட்டாயம் இது இருக்க வேண்டும்… மத்திய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…

Thu Sep 29 , 2022
அக்டோபர் 1 -2023 முதல் கார்களில் எவைஎல்லாம் அவசியமாக இருக்க வேண்டும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இது குறித்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.  மோட்டார் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு முதலில் பாதுகாப்பு அம்சங்கள் தான் முதன்மையானது பின்னர்தான் எந்த மாதிரியான கார், அதன் ரகம் என்ன என்பதை பார்க்க வேண்டும். […]

You May Like