fbpx

மக்களே..!! இனி உங்கள் பயண விவரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட கூடாது..!! அரசு எச்சரிக்கை..!!

மக்கள் தங்கள் பயண விவரங்களை சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.

நாட்டில் சைபர் குற்றங்களை தவிர்ப்பதற்காக மக்கள் தங்கள் பயண விவரங்கள் எதையும் சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான சைபர் தாக்குதல்கள், மக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் தகவல்களால் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதனை தடுப்பதற்காக, இணைய பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், உங்கள் தகவல் சைபர் குற்றத்திற்கு பயன்படுத்தப்படலாம். எனவே, உங்கள் பயண விவரங்கள் எதையும் சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ஆன்லைன் பண மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமோ அல்லது https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

வன்முறைக்கு ஆளாகும் முதியவர்கள்..!! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Fri Jun 16 , 2023
நாட்டில் உள்ள வயதான பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (50%) வேலை செய்யவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களில் பாதி பேர் படிக்காதவர்கள் என்கிறது ஹெல்ப் ஏஜ் இந்தியா ஏனும் அரசு சாராத தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை. நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் நிலை குறித்த ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பு சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவில், கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் […]

You May Like