சென்னையில் பிறந்திருந்தாலும் சிறு வயதிலேயே கலிபோர்னியா மாகாணத்திற்கு குடிபெயர்ந்து, இளம் வயது முதல் வெளிநாட்டவராகவே வளர்ந்து வந்தவர் சித் ஸ்ரீராம். இவர், சிறுவயது முதலே இசையை முறையாக கற்றவர். கடந்த 2013ஆம் ஆண்டு ஏ.ஆர் ரகுமான் இசையில், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “கடல்” என்கின்ற திரைப்படத்தில் “அடியே” என்கின்ற பாடலை பாடி தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.
இன்றளவும் தமிழ் சினிமாவில் நல்ல பல பாடல்களை பாடிவரும் சித் ஸ்ரீராமின் இசை கச்சேரி என்றால், பலருக்கும் பிடிக்கும். இந்த சூழலில் சென்னையில் சித் ஸ்ரீராம் ஒரு இசைக்கச்சேரி ஒன்றை நடத்தவிருக்கிறார். “Fever Live” இந்த இசை கச்சேரியை தயாரித்து வழங்க உள்ளது. சென்னையில் உள்ள நேரு மைதானத்தில், “நீ சிங்கம் தான்” என்கின்ற தலைப்பில் சித் ஸ்ரீராம் அந்த இசை கச்சேரியில் கலந்துகொள்வார். ஜூலை மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மேலும், இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், இதற்கான டிக்கெட்டுகள் தற்பொழுது விற்பனைக்கு வந்திருக்கிறது. Paytm Insider மற்றும் “Book My Show” உள்ளிட்ட இணையதளங்களுக்கு சென்று இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட்டுகளை மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். Fever Live நிறுவனத்தை பொறுத்தவரை, பிரபல Fever FM (91.9) நிறுவனத்தின் ஒரு சார்பு நிறுவனமாகும். பல மறக்க முடியாத இசைக்கச்சேரிகளையும், நேரலை நிகழ்ச்சிகளையும் நடத்திவரும் புகழ்பெற்ற நிறுவனம் எதுவென்பது குறிப்பிடப்பட்டது.
Read More : ஆம்ஸ்ட்ராங் கொலை..!! மூளையாக இருந்த பாஜக நிர்வாகி..!! யார் இந்த அஞ்சலை..?