fbpx

சென்னை மக்களே..!! இன்று மிக கனமழை எச்சரிக்கை..!! டிச.4இல் பெரிய சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம்..!!

டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் டிசம்பர் 3ஆம் தேதி மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், நாளை முதல் வரும் 5ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுப்பெற்றது. இது வரும் 3ஆம் தேதி புயலாக வழுபெறக்கூடும். இந்த புயலானது சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையில் 4ஆம் தேதி மாலை கரையை கடக்க கூடும்.

வட கிழக்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 3ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 3ஆம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் காற்று 5 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும், நாளையும் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மசோதாக்களை மீண்டும் அனுப்பினால் ஒப்புதல் தர வேண்டும்..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Fri Dec 1 , 2023
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு இணங்காத அவரின் செயல்பாட்டை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அத்துடன் மசோதாக்கள், அரசு உத்தரவுகள் மீது ஆளுநர் முடிவு எடுக்க கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநருக்கு […]

You May Like