fbpx

தமிழக மக்களே உஷார்..!! மீண்டும் மிக கனமழை எச்சரிக்கை..!! மாவட்டங்களின் லிஸ்ட் இதோ..!!

தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு – மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, குமரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை (நவ.22) தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு..!! நவ.30ஆம் தேதியே கடைசி..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே முந்துங்கள்..!!

Tue Nov 21 , 2023
செங்கல்பட்டு மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த பணியிடம் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாதம் ஒன்றிற்கு ரூ.18,536/- வரை தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு 10, 12ஆம் வகுப்புடன் சமூகப்பணி/சமூகவியல் / சமூக அறிவியில் ஆகியவற்றில் […]

You May Like