fbpx

தமிழக மக்களே இனி சிலிண்டர் வாங்க தேவையில்லை..!! பைப் மூலம் கேஸ் விநியோகம்..!!

சென்னையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரிய தலைவர் அனில்குமார் ஜெயின், சமீபத்தில் அளித்த பேட்டியில், “அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் ஐரோப்பாவிலும் ‘பைப் லைன்’ எனப்படும், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இது தான் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எல்.பி.ஜி., எரிவாயு ஆகியவற்றுக்கு மாற்றாக உள்ளது. இந்த இயற்கை எரிவாயு சுற்றுச்சூழலை பாதிக்காது. மற்ற எரிபொருளுடன் ஒப்பிடும் போது செலவும் குறைவு.

உலகில் இயற்கை எரிவாயு பயன்பாடு 25%ஆக உள்ள நிலையில், இந்தியாவில் வெறும் 6% ஆகவே உள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதிலுள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், கச்சா எண்ணெயில் இருந்துதான் எல்.பி.ஜி. எனப்படும் சமையல் கேஸ் தயாரிக்கப்படுகிறது. இது, 100% இறக்குமதியை சார்ந்துள்ளது. ஆனால், இயற்கை எரிவாயு 50% உள்நாட்டில் கிடைக்கிறது. மீதி 50% தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் எண்ணூர், கேரளாவில் கொச்சி உட்பட பல இடங்களில், திரவ நிலை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயுவை விநியோகிக்க, ‘டோரன்ட் காஸ், அதானி, ஏஜி அண்டு பி’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். தற்போது தமிழ்நாட்டில் 17,000 வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 2.20 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். உள்ளாட்சி அமைப்புகள், குழாய் வழித்தடம் அமைக்க விரைந்து அனுமதி வழங்க வேண்டும். இயற்கை எரிவாயு பயன்பாடு தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்” என்றார்.

Chella

Next Post

அசத்தும் தமிழகம்...! 2008-க்கு பிறகு கடந்த 29 நாட்களில், 30 பேர் உடல் உறுப்பு தானம்...!

Tue Jan 30 , 2024
தமிழகத்தில் கடந்த 29 நாட்களில், 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 29 நாட்களில், 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். 2024 ஜனவரி 1 முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2008க்கு பிறகு ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 27 பேர், இதயம் 10 பேர், […]

You May Like