கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது அபாய அளவில் இல்லை என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, எனினும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய கொரோனா பரவலுக்கு xbb 1.16 பிரிவு தான் காரணமென தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டியது இல்லை என்பதால் அபாயம் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் சிறிது காலத்திற்காவது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, காரைக்காலை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெறுவதற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று உயிரிழந்தார். காரைக்கால் பெண் உயிரிழப்பு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை இடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.