fbpx

இந்த 23 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க.. இன்று கனமழை கொட்டி தீர்க்குமாம்..

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 28-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 29,30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.. எனவே மீனவர்கள் நாளை முதல் 30-ம் தேதி வரை இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

புதிய கட்சியை தொடங்கினார் குலாம் நபி ஆசாத் …

Mon Sep 26 , 2022
காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுதலைக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிருப்தி தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை என 23 தலைவர்கள் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பினர். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக […]

You May Like