fbpx

இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க.. கனமழை வெளுத்து வாங்குமாம்..

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌, தேனி, மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 9 முதல் 11-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.
நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி பின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அஇகபட்ச வெப்பநிலை 35 டிஒரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்று முதல் 11-ம் தேதி வரை, குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுஇகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.. இதே போல் ஆந்திர கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ. வேகத்துலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் போரிஸ் ஜான்சன்..? பிரிட்டனில் அடுத்தது என்ன..?

Thu Jul 7 , 2022
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்க்கொடி தூக்கி உள்ளதால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. . பிரிட்டன் ஆளுங்கட்சி எம்.பி கிறிஸ் பிஞ்சர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவரை கடந்த பிப்ரவரி மாதம் அரசின் துணை கொறடாவாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்தார்.. அப்போதே போரிஸ் ஜான்சன் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.. இந்த நிலையில் கடந்த வாரம், கிறிஸ் […]

You May Like