தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும் விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வேலை வாய்ப்பு அறிவிப்பு. சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலமாகும். சுமார் 450 வருடங்கள் பழமையான வரலாறு கொண்ட இத்திருக்கோயில் மூலவராக அருள்மிகு மாரியம்மன் திகழ்கிறது. ஆண்டு முழுவதும் இத்திருக்கோயிலிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த, அன்னதான திட்டத்தில் உள்ளத் துப்புரவு பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயது நிறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், கல்வித் தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும். சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை அறிவிப்பு. https://irukkangudimariamman.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி, சாத்தூர் வட்டம். விருதுநகர் மாவட்டம்- 626202. தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் அதற்கு நிர்வாகம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது. விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.03.2023 மாலை 5 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது