fbpx

’மக்களே இது கட்டாயமாம்’..! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்..!

அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை தானாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளாதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கடந்த 6ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ரூ.319 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாகு | Dinamalar Tamil  News

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களிடம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாநிலம் மாவட்ட, சட்டமன்றத் தொகுதிகள் அளவில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக நிகழ்ச்சிகளைத் தொடங்க இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மக்கள் பிரதிநிதித்துவை சட்டத்தில் 23ஆம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் 6 பி விண்ணப்பத்தின் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு- மக்களவையில் இன்று மசோதா அறிமுகம் |  Tamil News Voter ID and Aadhaar card to be tabled in LS today

வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகளை வாக்களார் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அடையாளம் காண்பதுதான் இதன் நோக்கமாகும். வாக்காளர்கள் தானாக முன்வந்து ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களும் நடத்தப்படவுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் ஆதார் எண்ணை இணைக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு அறிவுறுத்தியுள்ளார். இதற்கான சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Chella

Next Post

தினமும் 2 ஜிபி டேட்டா.. அதுவும் மலிவான விலையில்.. Bsnl வழங்கும் அசத்தல் திட்டங்கள்...

Sat Jul 9 , 2022
நாட்டின் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிக்கனமான தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற திட்டங்களை வழங்க முயற்சிக்கின்றன.. அந்த வகையில், அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் இதுபோன்ற மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது, இதன் விலை ரூ .100 க்கும் குறைவாக உள்ளது. இந்த திட்டங்களில் ஒன்றில், பி.எஸ்.என்.எல் ஒவ்வொரு 2 ஜிபி தரவை வழங்குகிறது இந்த திட்டங்களைப் பற்றி விரிவாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். பிஎஸ்.என்.எல் […]
வெறும் 87 ரூபாய்க்கு தினமும் 1 ஜிபி டேட்டா..!! ஏர்டெல், ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் BSNL..!!

You May Like