ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14 அன்று “பசுவை கண்டுபிடிக்கும் தினமாக” கொண்டாடுமாறு இந்திய விலங்கு நல வாரியம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்,ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இனிவரும் காலங்களில் காதலர் தினத்தன்று “பசுவை கட்டிபிடிக்கும் தினமாக” கொண்டாட வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொண்டது.
தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாடலாம்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் பசுக்களை கட்டிப்பிடிப்பதால் தனிநபர் மற்றும் கூட்டு மகிழ்ச்சியை” அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
இந்துத்துவாவை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசின் இந்த வினோதமான அறிவிப்பிற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.