fbpx

திடீரென காணாமல் போன மக்கள்.. இன்று வரை விலகாத மர்மம்.. இந்தியாவின் விசித்திர கோட்டை பற்றி தெரியுமா..?

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.. கோயில்களின் நாடு என்றும் இந்தியா அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகள் பல உள்ளன.. ஆனால் ஒரு சில கோட்டைகளை பற்றி பல்வேறு மர்மங்கள் நிலவி வருகின்றன.. அப்படிப்பட்ட மர்மமான கோட்டையை பற்றி தற்போது பார்க்கலாம்.

உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கர்குந்தர் கோட்டை.. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை ஐந்து தளங்கள் வரை கட்டப்பட்டுள்ளது.. இந்தக் கோட்டையை யார் எப்போது கட்டினார்கள் என்பது பற்றிய சரியான தகவல்கள் இல்லை என்றாலும், இந்தக் கோட்டை 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. சண்டேலாக்கள், பண்டேலாக்கள் மற்றும் கங்கர்கள் போன்ற பல ஆட்சியாளர்கள் இங்கு ஆட்சி செய்துள்ளனர்.

இந்த கோட்டை பாதுகாப்பிற்காக கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.. ஆனால் இது மக்களை தவறாக வழிநடத்துகிறது. அதாவது தூரத்தில் இருந்து பார்க்கும் போது இந்த கோட்டை கண்ணுக்கு தெரியும்.. ஆனால் அருகில் சென்றால் பார்த்தால் கோட்டை இருக்காது.. மேலும் அருகே சென்றால், கோட்டைக்குப் பதிலாக அந்த வழி வேறு எங்கோ திரும்புமாம். கோட்டைக்கு மற்றொரு ரகசிய வழி உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த கர்குந்தர் கோட்டை இந்தியாவின் மர்மமான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோட்டை குறித்து சுற்றுவட்டார மக்கள் பேசிய போது “ அருகில் உள்ள கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண ஊர்வலம் நடந்தது.. அப்போது அந்த கோட்டையை பார்வையிட ஊர்வலம் வந்தது. அந்த கோட்டையின் அடித்தளத்திற்கு பலரும் சென்றனர், அதன் பிறகு அவர்கள் திடீரென்று காணாமல் போனார்கள். அந்த 50 முதல் 60 பேரை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு கீழே உள்ள அனைத்து கதவுகளும் மூடப்பட்டன..” என்று தெரிவித்துள்ளனர்..

இந்த சம்பவத்திற்குப் பிறகு மாலை நேரத்தில் கோட்டையைச் சுற்றி பார்க்க யாருக்கும் தைரியம் இல்லை என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோட்டையிலிருந்து விசித்திரமான ஒலிகள் வருவதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். மேலும் இந்த கோட்டையில் புதையல் இருப்பதாகவும், அதை கண்டுபிடிக்க முடியாமல் பலர் உயிரை மாய்த்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இங்கு வாழ்ந்த மன்னர்களிடம் தங்கம் மற்றும் வைரங்கள் இருந்ததாக வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

English Summary

There are many historical forts in India.. But there are many mysteries about some of the forts.. Now let’s see about such a mysterious fort.

Next Post

#Ban Rummy: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை... தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...! அன்புமணி ராமதாஸ்

Sun Jul 7 , 2024
Anbumani Ramadoss has insisted that the Tamil Nadu government should take action to ban online gambling.

You May Like