வருஷத்தில் 365 நாட்களில் 350 திருவிழாக்களும் உற்சவமும் நடக்கும் கோவில்கள், திருப்பதி வெங்கடாஜலபதி தவிர வேறு எந்த தெய்வத்திற்கும் நடப்பதில்லை. பொதுவாக பணக்கார சாமி என்றால் ஞாபகத்திற்கு முதலில் வருவது ஏழுமலையான் தான். பணக்கஷ்டம் இருப்பவர்கள் ஒரு முறை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து விட்டு வந்தால், வீட்டில் நன்மை உண்டாகும், கடன் இருக்காது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இதனால் தான் மக்கள் அதிகமாக திருப்பதிக்கு சென்று வருகின்றனர். ஆனால் பலருக்கு நினைத்த உடன், திருப்பதிக்கு சென்று வர முடியாது. திருப்பதிக்கு செல்வது அவ்வளவு சுலபம் இல்லை. அதிக அளவு மக்கள் திருப்பதிக்கு செல்ல முடியாமல் இப்போதும் உள்ளனர்.
பணக்கஷ்டம் அதிகம் இருப்பவர்கள், தமிழ் மாதங்களில் வரும் முதலாம் திங்கட்கிழமையில் ஏழுமலையானை தரிசித்தால், அந்த வருடம் முடிவதற்கு முன் அவர்கள் கோடீஸ்வரராகும் வாய்ப்புண்டு என முன்னோர்கள் அவர்களின் அனுபவத்தை பகிர்வதுண்டு. இத்தனை சிறப்பு வாய்ந்த திருப்பதிக்கு எல்லாராலும் செல்ல முடியாது. திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்குத் தடங்கல்கள் வரும். இதற்க்கு முக்கிய காரணம், சந்திரனின் தாக்கம் திருப்பதியில் அதிகமாக இருப்பதால், அது பலருக்கு மன நிம்மதியும் சிலருக்கு மனக்கலக்கத்தையும் ஏற்படுத்தும். அப்படி நீங்கள் மனக்கலக்கத்தை உணர்ந்தால், குடும்பத்துடன் திருப்பதி செல்வதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், ஆன்மீக ரீதியாக சிலர் திருப்பதிக்கு செல்லக்கூடாது. அதிலும் குறிப்பாக, மூன்று ராசியினர் திருப்பதிக்குச் செல்லக்கூடாது.
அந்த 3 ராசிகளாவன சிம்ம ராசி, தனுசு ராசி, கும்ப ராசி ஆகியனவாகும். இந்த ராசிக்காரர்கள் ஆண்டிற்கு ஒருமுறை போகலாம், தவறில்லை. ஆனால் அடிக்கடி சென்று வந்தால், நிச்சயம் அவர்களின் தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். இவைதவிர, மற்ற ராசிகள் அடிக்கடி திருப்பதி சென்று வரலாம். திருப்பதியில் பிரபஞ்ச சக்தி அதிகம் ஈர்க்கப்படுவதால், மேற்கூறிய ராசிக்காரர்கள் அடிக்கடி போகக்கூடாது. ஆனால், மற்ற ராசிக்காரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம். ஒருவேளை, நீங்கள் திருப்பதிக்குப் பயணப்பட ஆசைப்பட்டால் ஏழுமலையானை வேண்டி, ஒரு காணிக்கை உண்டியலை வைத்து, அதில் கிடைக்கும் தொகையை வைத்து பயன் செய்யலாம். மீதம் இருக்கும் தொகையை உண்டியலில் போடலாம்.