fbpx

வாய்ப்புண், நெஞ்செரிச்சல், குடல் புண் போன்றவைகளை தீர்க்கும் பலாப்பழம்..! யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது..!

குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும் பலாப்பழம் பலருக்கும் பிடித்தமான பழ வகைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. முக்கனிகள் ஒன்றான பலாப்பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பலாப்பழத்தில் பல நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணங்களும் உள்ளது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

1. நார்ச்சத்து நிறைந்துள்ள பலாப்பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல், அஜீரணம், குடல் புண்கள் போன்ற பிரச்சனைகளை சரி செய்து செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவி புரிகிறது.
2. வைட்டமின் கே சத்து பலாப்பழத்தில் அதிகமாக உள்ளதால் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
3. இதில் ஆண்டிஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் உடலை தாக்காமல் பாதுகாக்கிறது.
4. அல்சர், வாய்ப்புண், நெஞ்செரிச்சல், போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
5. உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் பலாபழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
6. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கிறது.  இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய  பலாபழத்த்தில் ஒரு சில தீமைகளும் உள்ளது. அதாவது இப்பழத்தை அதிகமாக சாப்பிடும் போது வயிறு வலி ஏற்படும். மேலும் பலாப்பழத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் குடல் வால் அழற்சி இருப்பவர்கள் இந்த பழத்தை கண்டிப்பாக சாப்பிட கூடாது.

Rupa

Next Post

டெல்லியில் 144 தடை அமல்!… ’டெல்லி சலோ’ பெயரில் நாளை விவசாயிகள் பேரணி!

Mon Feb 12 , 2024
டெல்லி, ஹரியாணாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதால், டெல்லியில் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் வரும் பிப்.13 அன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக […]

You May Like