fbpx

பட்டப்பகலில் திரைப்பட இயக்குனர் நட்சத்திர விடுதியில் வெட்டி படுகொலை…..! பெரம்பலூர் நகரை நடுங்க வைத்த பயங்கரம்….!

பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரணாரையை சேர்ந்தவர் திரைப்பட இயக்குனர் தமிழ் சினிமா என்கின்ற செல்வராஜ் திமுக நிர்வாகியான இவர் திரைப்படங்களை இயக்கியதுடன் பல்வேறு குறும்படங்களையும் இயக்கி விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருப்பதுடன் பிரபல ரவுடிகள் பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

இத்தகைய நிலையில் தான் நேற்று முன்தினம் இவர் தன்னுடைய திருமணம் மற்றும் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்தபடி அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் செல்வராஜை சரமாரியாக வெற்றி உள்ளனர் இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பாத இடத்தில் இருந்து பரிதாபமாக உயர்ந்தார் இதன் காரணமாக அந்த நட்சத்திர விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன்..….! விரக்தியில் பெண் குழந்தையை கொலை செய்த தாய் திருப்பூர் அருகே கொடூரம்…..!

Wed Jun 7 , 2023
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாவப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் இவருக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் இந்த நிலையில். கடந்த வருடம் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து வாழ தொடங்கினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சசிகுமார் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது அதோடு வசந்தி கருவுற்ற நிலையில், சென்ற […]

You May Like