fbpx

“குப்புறப்படுத்து தூங்கியது ஒரு குத்தமா.”? குடிபோதையில் குப்புறப்படுத்து உறங்கிய நபருக்கு பார்வை இழப்பு.! தைவானில் அதிர்ச்சி சம்பவம்.!

தைவானைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர், குடிபோதையில் குப்புற படுத்து தூங்கியதால் கண் பார்வையை இழந்தார். கண்ணில் ஏற்பட்ட அதீத அழுத்தத்தின் காரணமாக இவ்வாறு நடந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவருக்கு இஸ்கிமிக் ஆப்டிக் நியூரோபதி எனப்படும் கண் பக்கவாதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தக்கசிவும், கண் வீக்கமும் ஏற்பட்டு அவர் முற்றிலுமாக பார்வையை இழந்திருக்கிறார்.

தைவானைச் சேர்ந்த 44 வயது நபர், குடிபோதையில் குப்புற படுத்து தூங்கிய போது ஏற்பட்ட அழுத்தத்தினால் அவரது கண் பார்வை பறிபோனது. மூன்று நாட்களாக கடும் வலியை அனுபவித்த அவருக்கு, ஒரு கண்ணிமை வெடித்ததாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவர் மது அருந்திவிட்டு, தூக்கமின்மைக்காக மாத்திரைகளை எடுத்திருக்கிறார். பின்பு சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அவர், மூன்று மணி நேரத்திற்கு மயக்கமான நிலையிலேயே இருந்திருக்கிறார். இது அவரது கண்ணிமையில் தீவிர அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு கண் தசைகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. அவரது இமைகளில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, வெடித்ததாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் கண்ணில் ரத்தக்கசிவும், வீக்கமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இவருக்கு இஸ்கிமிக் ஆப்டிக் நியூரோபதி எனப்படும் கண்ணியில் நரம்பு கோளாறு மற்றும் கோரோய்டோபதி எனப்படும் விழித்திரை நிணநீர் பாதிப்பு ஆகிய நோய்கள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவரின் பார்வை நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் சரியாக செல்லாத காரணத்தினால், அவருக்கு கண்ணில் பக்கவாதம் வந்திருக்கிறது. அந்த நரம்புகள் சேதம் அடைந்ததால் ஒரு நபர் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் படங்கள் (images) போன்று தோன்றலாம். இந்த நோய் பொதுவாக கண் பார்வை இழப்பை உண்டாக்கும் என்றாலும் சிலருக்கு புறப்பார்வையை பாதுகாக்க முடியும். இந்த நோய்க்கு சாட்டர்டே நைட் ரெட்டினோபதி என்ற பெயரிட்டுள்ளனர்.

இந்த நோய்க்கான அறிகுறிகள் :

  • உச்சந்தலையில் வலி
  • மெல்லும் போது வலி
  • தசை வலி
  • கடுமையான கழுத்து வலி
  • பசியின்மை
  • விவரிக்க முடியாத இடை இழப்பு
  • பொருட்கள் சிறியதாக அல்லது தூரத்தில் இருப்பது போன்று தோன்றுதல்
  • நேர்கோடுகளில் சிதைவு
  • காய்ச்சல்

50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குளுகோமா, அதிக கொலஸ்ட்ரால், தூக்கத்தில் மூச்சு திணறல், அடைப்பட்ட தமனிகள், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளை உடையவர்கள் இந்த நோய்க்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Post

இனிமேல் எல்லாத்தையும் இந்தியாதான் நிர்ணயிக்கும்!… அண்ணாமலை பேச்சு!

Wed Feb 14 , 2024
2050ல் உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியா நிர்ணயிக்கும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக சார்பில் அதன் தலைவர் அண்ணாமலை தொகுதி, தொகுதியாக என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக பூவிருந்தவல்லி அருகே வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதல் முறை வாக்காளர்களான மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் […]

You May Like