fbpx

மீண்டும் ஜல்லிக்கட்டுவை எதிர்த்து பீட்டா மனு!!

ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்யக் கோரி விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்ட உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

பொங்கல் நாள் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். இதில் மதுரையில்தான் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் இந்த போட்டிகளில்பங்கேற்கின்றனர். மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படுகின்றன.

கடநத 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. இதை உச்சநீதிமன்றம் தடை செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்ற உத்தரவை நீக்க வேண்டும் என மெரினாவில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தொடர்ந்தே தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுதி அளித்தது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சட்டமாக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கியது. பின்னர் ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா நாட்களில் மட்டும் போட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது எந்த தடையுமின்றி வழக்கம் போல போட்டிகள் நடத்தப்படுகின்றது.

இந்த ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன. இதனால் இன்று ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

Next Post

நடிகை குஷ்பூ அடுக்கடுக்காக புகார்… திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை…

Tue Nov 15 , 2022
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை குஷ்பு அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்துள்ளார். தமிழக அரசின் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை அடையாற்றில் பா.ஜ.க. சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்தும் பால் விலை […]

You May Like