fbpx

#சற்றுமுன்: என்ஜின் கோளாறால் ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் நிறுத்தம்…!

ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் தள்ளி வைக்கப்பட்டது. என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தி வைத்துள்ளது. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திட்டமிட்டப்படி என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை ஏவ முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.

ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் தரையில் இருந்து 400 கி.மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்குமுன் 3 கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இஸ்ரோவின் முதல்கட்ட சோதனை நிகழ்வு ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு நடைபெற இருந்தது. அதை பாராசூட்கள் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்பட இருந்தது. என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தி வைத்துள்ளது

Vignesh

Next Post

கேன்சரை உண்டாக்குகிறதா டாபர் நிறுவன பொருட்கள்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Sat Oct 21 , 2023
டாபர் நிறுவனத்தின் 3 துணை நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் கனடாவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் முடி தயாரிப்புகள் கருப்பை மற்றும் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளது. நமஸ்தே லேபரட்டரீஸ் எல்எல்சி, டெர்மோவிவா ஸ்கின் எசென்ஷியல்ஸ் இன்க் மற்றும் டாபர் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய 3 டாபர் இந்தியா துணை நிறுவனங்கள் வழக்குகளை எதிர்கொள்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. ஹேர் ரிலாக்சர் தயாரிப்புத் துறையில் உள்ள […]

You May Like