fbpx

”இனி பத்திரப்பதிவின்போது சொத்துகள் தொடர்பான புகைப்படங்களும் கட்டாயம்”..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கவும், விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால், அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

எனவே, காலி மனையிடங்களை ஜியோ கோ.ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க வேண்டுமென கடந்த வாரத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. பதியப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலியிடத்தை புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக சேர்த்து மோசடி பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து தற்போது முக்கிய முடிவு எடுக்கப்படுள்ளது.

அதன்படி, சார் பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும். இந்த நடைமுறையானது அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

”நான் நெனைச்சா நடமாட முடியாது ஒவ்வொருத்தனும்”..!! ”உங்க வீட்டு பெண்களை கூட்டிட்டு வாங்க”..!! சீமான் காட்டம்

Fri Sep 15 , 2023
நடிகை விஜயலட்சுமி விவகாராத்தில், விஜயலட்சுமி, வீரலட்சுமியும் விசாரணைக்கு வரவேண்டும். அப்படி அவர்கள் வந்தால், நானும் வருகிறேன் என சீமான் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதில் அளித்த வீரலட்சுமி, நானும் விஜயலட்சுமியும் வருகிறோம். சீமான் அவரது மனைவியையும், தேன்மொழியையும் அழைத்து வருவாரா? என கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”நீ யாரு தேன்மொழி, கயல்விழி வரனும்னு சொல்றதுக்கு? என் பொண்டாட்டி வருவா.. சட்டம் […]

You May Like