fbpx

பள்ளி மாணவியிடம் சித்து விளையாட்டு காட்டிய ஆசிரியர்…..! இறுதியில் மாணவி எடுத்த அதிரடி முடிவுவால், ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

பள்ளி மாணவியிடம் தகாத முறையில், பாலியல் ரீதியாக அத்துமீறிய ஆசிரியர், அழுது கொண்டே வெளியேறிய சிறுமி, கடைசியில் எடுத்த அதிரடி முடிவால், அதிர்ந்து போன ஆசிரியர்.

அதாவது, கடலூர் பகுதியில் இருக்கின்ற ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளையத்தேவன்(52) என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர், இந்த பள்ளியில், கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து, பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், கடந்த 25 ஆம் தேதி ஆசிரியர்கள் ஓய்வு அறையில், இருந்த வெள்ளையத்தேவன், 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை அழைத்து, ஓய்வு அறையில் குப்பை உள்ளதாகவும், அதை சுத்தம் செய்ய வேண்டும் என்று, ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த மாணவி, ஆசிரியர்களின் ஓய்வு அறைக்கு சென்று, அங்கு கிடந்த குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ஆசிரியர் வெள்ளையத்தேவன் திடீரென்று, அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். ஆகவே அதிர்ச்சி அடைந்த மாணவி, அழுது கொண்டே, அந்த அறையை விட்டு வெளியேறியிருக்கிறார்.

பின்பு வீட்டிற்கு சென்ற அந்த மாணவி, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தொடர்ந்து, உணவு சாப்பிடாமல் இருந்துள்ளார். அதன் பிறகு, திங்கள் கிழமை பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்து இருக்கிறார். அதற்கு மறுநாளும் அவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால், பெற்றோர்கள் சந்தேகித்துள்ளனர்.

அதோடு, பெற்றோர்கள், இது பற்றி, விசாரித்த போது, பள்ளியில் நடந்த அனைத்தையும், தன்னுடைய பெற்றோர்களிடம் அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட பெற்றோர்கள், இந்த விவகாரம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். ஆகவே, பள்ளிக்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், ஆசிரியர் வெள்ளையத்தேவனை அழைத்துச் சென்று, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின்போது, ஆசிரியர், அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டார் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு, வெள்ளையத்தேவன் மீது, போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Next Post

விலையில்லா மடிக்கணினியுடன் கூடிய தொழிற்பயிற்சி...! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...!

Thu Aug 31 , 2023
2023 – 2024 ஆம் ஆண்டிற்கான அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்புவோர் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி சான்று, ஜாதி சான்று, மாற்று சான்று, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைந்தவருக்கும், அதிகபட்சம் ஆண்களுக்கு 40 வயது வரை […]

You May Like