அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை.. இந்த மாவட்டத்தில் மட்டும் தான்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஜூலை 6-ம் தேதி விடுமுறையாகும்.. மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோயில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

.

Maha

Next Post

மக்களே எல்லாம் உஷாரா இருங்க... வரும் 8-ம் தேதி வரை இந்த பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழை...! வானிலை மையம் தகவல்...!

Tue Jul 5 , 2022
தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like