fbpx

எல்லாமே விளம்பரத்திற்காக செய்கிறார்.! கனிமொழி பேருந்தில் பயணம்… திடீர் டிஸ்மிஸ்..!

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இவர் பேருந்து ஓட்டும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வருவது வழக்கம். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள கோவை சென்றுள்ள திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் கனிமொழி பயணம் மேற்கொண்டார். மேலும் பேருந்தில் பயணித்த பெண்களிடமும் உரையாடினார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த அவர், ஷர்மிளாவிற்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மேலும் ஷர்மிளா பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். செய்யும் தொழிலே தெய்வம், அனால் இவரோ அவ்வப்போது விளம்பரத்திரக்காக பயணிகளை ஏற்றுவது வீடியோ எடுப்பது என விளம்பரபடுத்திகொள்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் தான் பாராட்டு பெற்ற இவர் அதுக்குள்ளவே டிஸ்மிஸ் செய்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

தாயையும் மகளையும் கொடூரமாக கொலை செய்த கும்பல்….! மருமகனுக்கு கத்தி குத்து திண்டுக்கல் அருகே பயங்கரம்…..!

Fri Jun 23 , 2023
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் காலையில் வசித்து வருபவர் அய்யனார், இவருடைய மனைவி வள்ளியம்மாள் (55) இவர்களுக்கு ராசாத்தி(32) என்ற மகளும், லட்சுமணன் (35) என்ற மருமகனும் இருக்கின்றனர். எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர் கள்ளிப்பட்டி அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று இரவு 8 […]

You May Like