fbpx

ஜாம்பிகளாக மாறும் புறாக்கள்..!! பிரிட்டனில் பரவும் கொடிய நோய்..!! மனிதர்களுக்கும் ஆபத்தா..? அதிர்ச்சி

புறாக்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவும் நோய் ஒன்று புறாக்களை ஜாம்பிகள் போல மாற்றும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் கண்டறியப்படும் பறவை என்றால் அவை புறாக்கள் தான். அவை இருக்கும் இடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும். இதன் காரணமாகவே கிராமங்களிலும் புறாக்களால் வசிக்க முடியும். முற்றிலும் நகரமயமாக்கப்பட்ட சென்னை போன்ற நகரங்களிலும் புறாக்களால் வசிக்க முடிகிறது. இப்படி புறாக்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. அங்கு நிலவும் குளிர்ச்சியான சூழலிலும் கூட புறாக்களால் எளிதாக வாழ முடியும். இதனிடையே பிரிட்டன் முழுவதும் இப்போது பரவும் புதிய வகை தொற்று நோய் ஒன்று புறாக்களை ஜாம்பிக்களாக மாற்றுகிறது. புறா பாராமிக்சோவைரஸ் அல்லது நியூகேஸில் நோய் எனப்படும் இந்த கொடிய நோய் பாதிப்பு ஜெர்சி இன புறாக்கள் மத்தியில் வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜாம்பிகளாக மாறும் புறாக்கள்..!! பிரிட்டனில் பரவும் கொடிய நோய்..!! மனிதர்களுக்கும் ஆபத்தா..? அதிர்ச்சி

புறா பாராமிக்ஸோவைரஸ் எனப்படும் இந்த நோய் நரம்பியல் பாதிப்பால் ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்படும் புறாக்களின் உடலில் தொடர்ந்து நடுக்கம் ஏற்படும். அதன் கழுத்தும் தலைகீழாகத் திரும்பிவிடும். இதில், பாதிக்கப்படும் புறாக்களால் எப்போதும் பறக்க முடியாது. இதன் மலமும் பச்சை நிறத்தில் மாறிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நோய் தாக்கிய பின்னர் புறாக்கள் உணவைச் சாப்பிடவும் சாப்பிடாதாம். இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, கழுத்து தலைகீழாகத் திரும்பியுள்ள புறாக்களின் படங்கள் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய் எளிதாகப் பரவும் என்பதால் அங்குப் பிரிட்டனில் உள்ள அனைத்து பறவைகள் மத்தியிலும் இது பரவுமோ என்று அஞ்சப்படுகிறது. இதில் பாதிக்கப்படும் புறாக்கள் காப்பகங்களில் தங்க வைக்கப்படுகிறது. காப்பகங்களில் உள்ள பறவைகளின் கழுத்துகள் திரும்புவதாகவும் அவற்றால் நிற்கக் கூட முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜாம்பிகளாக மாறும் புறாக்கள்..!! பிரிட்டனில் பரவும் கொடிய நோய்..!! மனிதர்களுக்கும் ஆபத்தா..? அதிர்ச்சி

புறாக்கள் உள்ளிட்ட பறவைகளுக்கு இது மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்ட பறவைகளின் மலம் உள்ளிட்ட எச்சங்களின் மூலமே இந்த நோய் மற்ற புறாக்களுக்குப் பரவுகிறது. இந்த நோயைக் குணப்படுத்தத் தனியாக மருந்துகள் எதுவும் இல்லை. சிகிச்சை மூலம் நோயின் தீவிர தன்மையைக் குறைத்து அவை உயிர் வாழும் வாய்ப்புகளை அதிகரிக்கலாமே தவிர, முழுவதுமாக குணப்படுத்த மருந்துகள் எதுவும் இல்லை. இதனால் காப்பகங்களில் புறாக்களின் நிலை மோசமடைந்தால் அவை கருணை கொலை செய்யப்படும். பொதுவாக ஈரப்பதம் அதிகம் இருக்கும் குளிர் காலங்களில் இந்த வைரஸ் எளிதாக உயிர் வாழும். அதாவது குளிர் காலத்தில் தான் இந்த வைரஸ் வேகமாகப் பரவும் வாய்ப்புகள் அதிகம். பிரிட்டனில் பல இடங்களில் இருக்கும் பறவைகளிடம் இந்த நோய்ப் பாதிப்பு இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஜாம்பிகளாக மாறும் புறாக்கள்..!! பிரிட்டனில் பரவும் கொடிய நோய்..!! மனிதர்களுக்கும் ஆபத்தா..? அதிர்ச்சி

இந்த நோய் புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் மத்தியில் வேகமாகப் பரவும் என்றாலும் கூட, இதனால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை. மனிதர்கள் மத்தியில் இந்த நோய் பரவாது. அதேநேரம் பறவைகளைக் கையாளும் மனிதர்களுக்கு இது கான்ஜுன்க்டிவிடிஸ் போன்ற அலர்ஜி பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. மற்றபடி மனிதர்களுக்கு இது எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.

Chella

Next Post

விவசாயிகள் கவனத்திற்கு..!! நாளை ரெடியா இருங்க..!! அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி..!!

Mon Oct 31 , 2022
நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அரசின் வேளாண்மைத் துறை திட்டங்கள் பற்றி விளக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நவம்பர் 1ஆம் தேதியன்று, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, […]
விவசாயிகள் கவனத்திற்கு..!! நாளை ரெடியா இருங்க..!! அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி..!!

You May Like