தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தங்கம், போதை பொருட்கள், பீடி இலைகள், கடல் அட்டை போன்றவற்றை நடத்தும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் அந்த நாட்டில் சென்ற வருடம் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக, மருத்துவ பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆகவே தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியலில் மருந்து மாத்திரைகளும் தற்போது இடம் பிடித்திருப்பதாக தெரிகிறது.
சென்ற சனிக்கிழமை மாலை தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு கடற்கரையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கல்பிட்டி கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு ஆம்ணி வேனில் தமிழ்நாட்டில் இருந்து படத்தின் மூலமாக கடத்திச் செல்லப்பட்டு பறித்து வைத்திருந்த 4.23 லட்சம் பிரிகாபாலின் என்ற பெயருடைய மனப்பதட்டத்தை தணிக்க கூடிய மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கொழும்பு மாவட்டம் ராஜகிரி பகுதியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர் காவல்துறையினர் அதோடு, கடத்தலில் தொடர்புடையவர்கள் தொடர்பாக இலங்கையை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்யப்பட்ட மாத்திரைகளின் இந்திய மதிப்பு சுமார் 1.20 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.