பிக்சல் 7 மாடல் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து பிக்சல் 8 மாடல் போனை களமிறக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீமியம் செக்மென்டில் சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு வரும் கூகுள் பிக்சல் நிறுவனம், சமீபத்தில் பிக்சல் 7 மாடல் மூலம் வரவேற்பை பெற்றநிலையில் தனது அடுத்தபடைப்பான பிக்சல் 8 போனை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த பிக்சல் 8 சீரிஸில் கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8)மற்றும் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro)என இரு மாடல்கள் விற்பனைக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.
அதேபோல் இந்த பிக்சல் 8 சீரிஸ் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொறுத்தவரை, கூகுள் பிக்சல் 8 மாடலானது, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன்கூடிய 6.17-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மற்றும் 2400 x 1080 ஒஎல்இடி பிக்சல்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். அதேபோல், கூகுள் பிக்சல் 8 மாடலானது, 6.7-இன்ச் க்யூஎச்டி பிளஸ் (QHD+) எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் 2960 x 1440 பிக்சல்ஸ் சப்போர்டை கொண்டிருக்கும் எனக்கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ போன்கள் கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இயங்கும். மேலும், கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் பிக்சல் 8 ப்ரோ மாடலானது 128ஜிபி/256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜுடன் அறிமுகமாகும் எனக்கூறப்படுகிறது. இந்த இரண்டு கூகுள் பிக்சல் போன்களும் 12ஜிபி ரேம் உடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, கூகுள் பிக்சல் 8 சீரிஸ் 50எம்பி பிரைமரி கேமரா(Samsung ISOCELL GN2 sensor) +12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 11எம்பி கேமராவுடன் அறிமுகமாகும். பேட்டரி பேக்கப்பை பொறுத்தவரை, கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ஆனது 4485எம்ஏஎச் பேட்டரி மற்றும் 24 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 12 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. அதேசமயம் பிக்சல் 8 ப்ரோ 4950 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 8 ஆனது லைகோரைஸ் (Licorice) மற்றும் பியோனி (Peony)மற்றும் ஹேஸ் (Haze) நிறங்களில் அறிமுகம் செய்யப்படும். பின்பு பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் லைகோரைஸ் (Licorice), ஸ்கை (Sky)விற்பனைக்கு கிடைக்கும். கூகுள் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட் போன் முந்தைய மாடலான பிக்சல் 7-ஐ விட மேம்பட்ட வெர்ஷன் என்பதால் இந்தியாவில் இதன் விலை சற்று அதிகமாகவே காணப்படும் எனத் தெரிகிறது.