வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய வரி விதிப்பு நடைமுறையை அமல்படுத்த கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகன நெரிசல் வரி (Congession Tax) என்ற புதிய ஒழுங்குமுறையை அமல்படுத்தக் கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூருவுக்குள் நுழையும் வகையில் அமைந்துள்ள 9 சாலைகள் வழியாக பீக் ஹவர்களில் நுழையும் வாகனங்களுக்கு ‘Congestion Tax’ விதிக்கப்படவுள்ளது; இந்த வரியை, தற்போது வாகனங்களில் பயன்பாட்டில் இருக்கும் Fastag முறையின் மூலம் வசூலிக்கப்படும்.
பீக் ஹவர்களில் பெங்களூரு நுழைய விரும்பும் வாகன ஓட்டிகள், வரி செலுத்த வேண்டுமே என்பதற்காக தங்களது பயணத்தை வேறொரு நேரத்திற்கு மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு என என்பதால் இந்த நடைமுறையை கொண்டு வர அரசு திட்டத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, பெங்களூரில் தினமும் 12 மில்லியன் வாகனங்கள் நுழைகின்றன. அறிக்கையின்படி, ஏறக்குறைய 1.2 கோடி குடிமக்கள் ஆண்டுதோறும் 60 கோடி மணிநேரத்தை வீணடிக்கிறார்கள், அத்துடன் ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 2.8 லட்சம் லிட்டர் எரிபொருளையும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக வீணடிக்கிறது. 2007 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், பெங்களூரில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் 280% அதிகரித்து, 2.1 மில்லியனில் இருந்து 8 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, நகரத்தில் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்புகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது