fbpx

இலவச மருத்துவ காப்பீடு தொகையை அதிகரிக்க திட்டம்!…. விண்ணப்பிக்கும் முறை!

ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. 2024 பட்ஜெட்டில் PMJAY காப்பீட்டுத் தொகையை அரசு அதிகரிக்கலாம் என அதகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் சாமானிய மக்களுக்கு அரசு ரூ.5 லட்சம் தொகைக்கான காப்பீடு வழங்குகிறது. PMJAY இன் காப்பீட்டுத் தொகையை 5 லட்சத்தில் இருந்து 10 முதல் 15 லட்சமாக அரசு உயர்த்தலாம் என கூறப்படுகிறது. மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்னும் மருத்துவ சேவைக்கான திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. மக்களுக்கான இந்த இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு நிதியும் ஒதுக்கீடு செய்கிறது.

முதலில் healthid.ndhm.gov.in என்னும் மத்திய அரசின் இணைய தளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்துக்குள் நுழைந்ததும் Create ABHA Number என்ற லின்க இருக்கும். அந்த எண்ணை பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய அடையாளத்தை உறுதி படுத்த ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசன்ஸை ஆதாரமாகக் கொடுக்கலாம். ஆதார் எண்ணை வைத்து உள் நுழையும்போது உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த எண்ணை பதிவிட்டு லாக்இன் வேண்டும்.

லாக் இன் செய்தது, உங்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை தோன்றும். இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். சமீபத்தில், ஆயுஷ்மான் பாரத் உடல் நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. முன்னதாக ‘ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்’ என அழைக்கப்பட்டன.

காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க திட்டமிடும் அரசு: PMJAY இன் கீழ் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையை அரசாங்கம் 5 லட்சத்தில் இருந்து 10 முதல் 15 லட்சமாக உயர்த்தலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ், 60 கோடி மக்களை சுகாதார காப்பீட்டில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஆண் துணை இல்லாமல் 2023-ம் ஆண்டில், 4000-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பம்...!

Sat Dec 16 , 2023
2018-ம் ஆண்டு ஹஜ் பயணத்தில் ஆண் துணை இல்லாமல் பெண்கள் பங்கேற்பதற்கான (எல்.டபிள்யூ.எம்) பிரிவு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது, அன்றிலிருந்து இந்தப் பிரிவின் கீழ் மேலும் பெண்கள் விண்ணப்பித்தலை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. 2023-ம் ஆண்டில், 4000-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புனித ஆன்மீக யாத்திரையைச் செய்ய ஆண் துணையை மெஹ்ரம் அவர்கள் சார்ந்திருந்திருக்க வேண்டியிருந்தது. 2018-ம் ஆண்டில் […]

You May Like