அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கூடிய வடக்கு குறித்து நீதிபதி அல்லி காணொளியின் மூலமாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. முன்னதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரைக்கும் நீதி வந்த காதலின் வைப்பதற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதனை எடுத்து திமுக வின் தரப்பில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்தும், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் அவரை காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தும், மேலும் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காதலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து அமலாக்கத்துறை சார்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இத்தகைய நிலையில், செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் படுத்த இயலாத சூழ்நிலை காணப்படுவதால், காணொளியின் மூலமாக நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு இருக்கிறது.