fbpx

கட்டிட வரன்முறை செய்யும் திட்டம்…! 6 மாதம் கால அவகாசம் … உடனே இதை செய்து முடிக்க வேண்டும்…!

கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 6 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் (HACA) அமையும் பட்சத்தில் அரசு கடிதம் 6.15535/24(3)/2019, . 18.02.2020- குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

English Summary

Planning of building limits…! 6 months duration

Vignesh

Next Post

’உங்கள் பெயரை நீக்கிட்டாங்க’..!! ’உடனே செக் பண்ணிக்கோங்க’..!! 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் அதிர்ச்சி..!!

Fri Aug 23 , 2024
The central government has removed 23,64,027 beneficiaries from the 100-day scheme and has caused a shock.

You May Like