fbpx

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமா? அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்..!

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடக்கம்.

அக்டோபர் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) 2022ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் (சனி, ஞாயிறு) அரசு விடுமுறையாக இருப்பதால், அக்டோபர் 21ஆம் தேதியே பயணத்தை தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிவடைந்ததால், பெரும்பாலான மக்கள் பேருந்துகளின் முன்பதிவுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமா? அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்..!

இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், 30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யக் கூடிய வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 22ஆம் தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.com என்ற இணையதளம் வழியாக பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம். சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் பிற பகுதியில் இருந்து சென்னை வருவதற்கும் இன்று முன்பதிவு செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமா? அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்..!

கோயம்பேட்டில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி மற்றும் கும்பகோணம், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முன்பதிவு செய்யும் திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முதலில் 600-க்கும் மேற்பட்ட அரசு விரைவு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய இணைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு அதிகமாவதை தொடர்ந்து, மேலும் பேருந்துகள் முன்பதிவுக்குள் கொண்டு வர அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

Chella

Next Post

பரம்பிக்குளம் அணை மதகு திடீர் உடைப்பு..! கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Wed Sep 21 , 2022
பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணை மதகில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால், கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பி.ஏ.பி. திட்டத்தில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரி பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன. பி.ஏ.பி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளாவுக்கு 19.55 டிஎம்சியும் நீர் பகிர்மானம் செய்து கொள்ள வேண்டும். இந்த 9 அணைகளில் பரம்பிக்குளம் […]
பரம்பிக்குளம் அணை மதகு திடீர் உடைப்பு..! கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

You May Like