தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தோட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நேற்றில் இருந்து தொடங்கப்பட்டன.அதில் ஒரு பகுதியாக இன்று விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவெண்ணைய் நல்லூர் பிரிவில் 3500 மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விழுப்புரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர், ஆகிய மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் பணி இன்று நடைபெற்றது.
இதனை திருவெண்ணைநல்லூர் உதவி பொறியாளர் விஜயலட்சுமி மரக்கன்றுகளை நடும் பணியினை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் உதவி பொறியாளர் விஜயலட்சுமி, உதவி பொறியாளர் மற்றும் சாலை ஆய்வாளர் அம்சவல்லி சாலை பணியாளர்கள் ஏராளமான பங்கேற்று மகிழமரம், வேப்பமரம், அரசமரம், புங்கமரம், உள்ளிட்ட 3500 மரக்கன்றுகள் நடப்பட்டன.