ITBP, BSF வீரர்கள் சமூக வலைதளத்தில் சீருடையில் புகைப்படம், வீடியோ எடுத்து பதிவிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ITBP, BSF வீரர்கள் சமூக வலைதளத்தை கவனமாக கையாள வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களுடன் நட்பு கூடாது. சீருடையில் புகைப்படம், வீடியோ எடுத்து பதிவிடக் கூடாது என CRPF உத்தரவிட்டுள்ளது. மேலும் ITBP, BSF வீரர்கள் எல்லைப் பகுதியில் வீடியோக்கள் எடுத்து யாருக்கும் பகிரக் கூடாது எனவும் அந்தந்த படைகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
‘ஹனி டிராப்’ போன்ற வலைகளில் வீரர்கள் சிக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு படைகளுக்கு புலனாய்வு அமைப்புகள் கடிதம் எழுதியதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
48 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட உத்தரவில், மத்திய போலீஸ் படைகள் தங்கள் ஊழியர்களிடம் அடையாளம் தெரியாத நபர்களிடம் ஆன்லைன் நட்பில் ஈடுபட வேண்டாம், புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டாம். ஏனெனில் இது ‘ ஹனி டிராப்’ மற்றும் முக்கியமான தகவல்கள் கசிவு அபாயத்தை அதிகரிக்கும். நாட்டின் நலனை கருதியும், எல்லை பாதுகாப்பது கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.