பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், ராஜினமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளின் காரணமாகவும் ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித், முன்னதாக அசாம், மேகாலயா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் 14-வது தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.