கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் என்ற கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வருகிறார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதான அள்ளி கிராமத்தில் இருக்கும் தன்னுடைய சகோதரியான சந்தியாவின் வீட்டில் தங்கியிருந்து அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு கோவிந்தசாமி வந்துள்ளார். இதனை கண்ட சந்தியா, அவரது கணவர் சின்னசாமி ஆகியோர் பெற்றோர் இறந்து விட்டதால் இப்படி படிக்காமல் மது அருந்தி வருகிறாயே என்று கண்டித்து இருக்கிறார்கள்.
அத்துடன் நீ படிக்காமல் மது அருந்தி விட்டு வந்தால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று சந்தியா தன்னுடைய தம்பியை மிரட்டி இருப்பதாக தெரிகிறது. ஆகவே மன உளைச்சலில் இருந்த ஆதார் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அறிந்து கொண்ட காவல்துறையினர் சமவெளிடத்திற்கு வந்து கோவிந்தசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.